ed1ef1058adf
weatherPublished: November 14th, 2023 - 3:24 PM - Admin

வெளுத்து வாங்கும் கனமழை: சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

Total Views - 242
content-img

சென்னையில் தொடர்ந்து நல்ல மழை பெய்து வரும் நிலையில், நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது சூடுபிடித்துள்ளது. பருவமழை கொஞ்சம் தாமதமாக தொடங்கியது. எனினும் ஆரம்பத்தில் குறைவான மழையே இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Tags

Read More News

@tamilnewsinfo-2023 . All Rights Reserved

Latest Tamil News

Latest Sports News

Latest Cinema News

Latest Politics News

Latest Weather News

Latest horoscope

Trending news

Tamil Seithigal

Today News

Viral news

Hollywood

Kollywood

Bollywood

Worldcup 2023 news

IPL news updates

Cricket update

Tamilnadu News updates

Serail News updates

Technology News updates

Movie updates

Astrology

Career news in tamil

Environment news